ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு கணினிகள் விநியோகம்

ஷா ஆலம், மே 6- “அக்ரோ பெரிஹாத்தின்“ எனப்படும் வேளாண் பரிவுத் திட்டத்தின் கீழ் கிள்ளான், கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்டங்களைச் சேர்ந்த 40 விவசாயிகள் மடிக்கணினி மற்றும் கையடக்க கணினிகளைப் பெற்றனர்.

உற்பத்தியைப் பெருக்குவது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மற்றும் மனித மூலனத்தை மேம்படுத்துவது  ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கணினிகள் வழங்கப்பட்டதாக விவசாயத் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

தொழில் நுட்பம் சார்ந்த கல்வி மற்றும் வேளாண் துறையின் துரித வளர்ச்சி அலையிலிருந்து விவசாயிகளும் அவர்களின் பிள்ளைகளும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது என்றார்  அவர்

விவசாயிகளின் சுமையை  குறைக்கவும் அவர்கள் தங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும் இந்த கணினிகள் பெரிதும் துணை புரியும் என்று நம்புகிறேன் என தனது  பேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசின் 2021-2025 சிலாங்கூர் உருமாற்றுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள ஒன்பது அம்சங்களில் ஒன்றாக இந்த கணினி விநியோகத் திட்டமும் இடம் பெற்றுள்ளது என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :