ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 1,645 பேர் பாதிப்பு- 3 மரணச் சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், மே 29- நாட்டில் நேற்று 1,645 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்து 2 ஆயிரத்து 579 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 1,809 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்த வேளையில் இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 41 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளதாக கோவிட்நாவ் அகப்பகம் கூறியது.

மேலும் கோவிட்-19 தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள் மருத்துவமனையிலும் ஒரு மரணம் மருத்துவமனைக்கு வெளியிலும் நிகழந்துள்ளது.

இந்நோய் சம்பந்தப்பட்ட 25,218 சம்பவங்கள் இன்னும் தீவிர தன்மையுடன் உள்ளதாக அந்த அகப்பக்கத்தின் தரவுகள் கூறின. தீவிரத் தன்மையுடைய நோயாளிகளில் 24,238 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 16 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் தனிமைப்படுத்துதல் மற்றும்  சிகிச்சை மையங்களிலும் 930 பேர் மருத்துவமனைகளிலும் 17 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவியின் உதவியின்றியும் 17 பேர் சுவாசக் கருவியின் உதவியுடனும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Pengarang :