ALAM SEKITAR & CUACAECONOMYPBTPENDIDIKANSELANGOR

மாநில அரசு வழங்கும் இலவச சேவைகளை ஏன் வீணடிக்க வேண்டும்” என்று கேட்டார்.

சபாக் பெர்ணாம் , மே 29, – மக்களின் நல்வாழ்வில் அக்கறைகொண்டு செயல் படும் அரசாங்கங்களால் மக்களுக்கு பல நன்மைகள் கிட்டும் என்பது உலகறிந்த உண்மை. நீண்ட காலமாக மலேசிய மக்களிடம் உள்ள ஆதங்கம் இது, கடந்த 65 ம் ஆண்டுகளில் மலேசியர்களிடம் அதிகரித்து வருகிறது.

எந்த வளமும் இல்லாத நம் அண்டை நாடுகளை கண்டு ஏக்க பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு. அவர்கள் மீது அக்கறை கொண்ட ஆட்சியை வழங்கி வருகிறது சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் . அதன் திட்டங்களில் ஒன்று மக்கள் சுகாதார பரிசோதனைத் திட்டம் என்கிறார்,  ஒரு மூத்த குடிமகன், தியோ எங் லெட் 72 வயது, ”தனக்கு மருத்துவக் காப்பீட்டு உண்டு, நாள் பட்ட நோயின் வரலாறு இல்லாத போதிலும், மாநில அரசு வழங்கும் இலவச சேவைகளை ஏன் வீணடிக்க வேண்டும்” என்று கேட்டார்.
“இந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பற்றிய அறிவிப்பை ஃபேஸ்புக்கில் பார்த்தேன், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் போது ஏன் அதனை வீண்னடிக்க வேண்டும்?”
”இப்போ திடீர்னு எல்லாவித நோய்களும் வரலாம்! இப்போதைய உடல்நிலை எப்படியிருக்குனு தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பு.”

“இதுவரை, எனது உடல்நிலை இன்னும் நல்ல நிலையில் இருப்பதாகவும், எந்த நோயும் இல்லை என்றும் மருத்துவரும் கூறினார்” என்று தாமான் வாவாசன் சபாக் பெர்ணாமில் வசிக்கும் ஐந்து குழந்தைகளின் தந்தை கூறினார்.


Pengarang :