ECONOMYSAINS & INOVASISELANGOR

மூலிகை கலந்த மீன் உணவு கண்டுபிடிப்புக்காக யுனிசெல் அனைத்துலக விருது பெற்றது

ஷா ஆலம், ஜூன் 1– கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அண்மையில் நடைபெற்ற அனைத்துலக வடிவமைப்பு, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் (ஐடெக்ஸ் 2022) சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) தங்கப் பதக்கம் வென்றது.

“அக்குவாபீட்டல்“ என பெயரிடப்பட்ட மீன் தீவனத்தைக் கண்டு பிடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான அந்த உயர்கல்விக் கூடம் கூறியது.

“அக்குவாபீட்டல்“ என்பது நீர்வாழ் தாவரங்களிலிருந்து பெறப்பட்ட புரதம் பொருள்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகை சாறு கலந்து தயாரிக்கப்பட்ட மீன் உணவாகும்.

மீன்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்தை மட்டும் இது வழங்கவில்லை.

மாறாக, அந்த தீவனத்தில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகை கலவை மீன்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று அந்த பல்கலைக்கழகம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மீன் தீவனத்தை டாக்டர் சித்தி ஹஸ்மா மொத்தாரை தலைவராகவும் நோர் ஃபஸ்ரின் ஜூல்கிப்ளி, நோர் அக்மால் சுலிமான், ரோஸிலா அலியாஸ் மற்றும் யசோதா சுந்தரராஜூ ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு உருவாக்கியுள்ளது.

கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்த அனைத்துலக கண்காட்சியில் கலந்து கொண்டவர்களை குறிப்பாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களை இந்த தயாரிப்பு பெரிதும் ஈர்த்தது.


Pengarang :