ECONOMYSELANGOR

சிப்ஸ் 2020 மாநாடு- கண்காட்சி பங்கேற்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஷா ஆலம், ஜூன் 2- சிலாங்கூர் அனைத்துலக வாணிக மாநாடு (சிப்ஸ் 2020) தொடர்பான கண்காட்சியில் பங்கேற்க கண்காட்சி ஏற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிலாங்கூர் மாநில அரசின் ஒத்துழைப்பில் இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு மற்றும் கண்காட்சித் தொடர் வரும் அக்டோபர் மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டையொட்டி  நூற்றுக்கணக்கான கண்காட்சி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு சதுர அடி கண்காட்சி மையம் மலேசியர்களுக்கு 600 வெள்ளி கட்டணத்தில் வாடகைக்கு விடப்படும், வெளிநாட்டினருக்கு 150 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கப்படுகிறது.

ஆசியான் மற்றும் அனைத்துலக சந்தைகளில் ஊடுருவுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் இந்த கண்காட்சியில் பங்கேற்று பயனடையுமாறு தொழில் துறையினர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் கலந்துரையாடக்கூடிய வாய்ப்பினை பங்கேற்பாளர்கள் பெற முடியும்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த  மாநாடு கடந்தாண்டு நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் நடத்தப்பட்டது. இவ்வாண்டு இது பேராளர்களின் நேரடி பங்கேற்புடன் நடைபெறுகிறது.


Pengarang :