ECONOMYPBTSELANGOR

மலிவு விற்பனைத் திட்டம் நாளை தொடக்கம்- 14,000 கோழிகள் கோழிகள் விற்பனைக்கு வைக்கப்படும்

பெஸ்தாரி ஜெயா, ஜூன் 2– நாளை தொடங்கும் சிலாங்கூர் மலிவு விற்பனைத் திட்டத்திற்கு 14,000 கோழிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அதே சமயம், விற்பனைக்கு வைக்கப்படும் கோழிகளின் எண்ணிக்கையை தினசரி 20,000 ஆக உயர்த்துவதற்கான முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.

தாய்லாந்தில் கோழியின் விலை 10.00 வெள்ளியாக உள்ளது. நம் நாட்டில் அந்த உணவுப் பொருளின் உச்சவரம்பு விலை கிலோ வெ.9.90 ஆக மட்டுமே உள்ளது. ஆகவே கோழியை இறக்குமதி செய்வதற்கான அவசியம் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தினசரி 20,000 கோழிகள் என்ற இலக்கை அடைவதற்காக மாநில அரசு உள்ளூர் கோழி விநியோகிப்பாளர்களை அணுகும். கூடிய விரைவில் இந்த எண்ணிக்கையை எட்ட முடியும் என நம்புகிறோம்  என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள  சிலாங்கூர் ஃப்ரூட் வேலியில் இன்று சிலாங்கூர் பயிர் விதைகளை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :