ECONOMYNATIONAL

15வது பொதுத்தேர்தல்- சுகாதார அமைச்ச விவேகமான, பாதுகாப்பான நடவடிக்கையை எடுக்கும்

மலாக்கா, ஜூன் 6– நாட்டில் 15வது பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு விவேகமான மற்றும் பாதுகாப்பான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் கைரி  ஜமாலுடின் கூறினார்.

நாடு இன்னும் எண்டமிக் நகர்வு கட்டத்தில் உள்ளதோடு இக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகளை கண்டறிவதற்கு அமைச்சு இன்னும் காத்திருக்கிறது என்று அவர் சொன்னார்.

எண்டமிக் கட்டத்தை நோக்கிய இந்த நகர்வு கோவிட்-19 பரவலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே 15வது பொதுத்தேர்தலை நடத்துவது பாதுகாப்பானது என நாம் உணர முடியும். இது மாநிலத் தேர்தல்கள் போல் இல்லை. மாநிலத் தேர்தலில் பல்வேறு விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியும்.

எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்த விரும்பும். மாநிலத் தேர்தல்களின் போது பெரிய அளவிலான மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் நடைபெறவில்லை. என்னைப் பொறுத்த வரை நாம் மிகுந்த விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருப்பது அவசியம் என்றார் அவர்.

அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் ஜூலை மாதம் காலாவதியாவதோடு கோவிட்-19 நிலைமையும் தற்போது மேம்பாடு கண்டுள்ளதால் 15வது பொதுத் தேர்தலை இனியும் ஒத்தி வைப்பதற்கு எந்த காரணமும் கிடையாது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி கூறியிருந்தது தொடர்பில் அமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :