ECONOMYMEDIA STATEMENTPBT

அம்பாங்கில் நாளை நடைபெறும் உதவித் திட்ட நிகழ்வில் 2,000 கோழிகள் விற்பனைக்கு வைக்கப்படும்

ஷா ஆலம், ஜூன் 18- அம்பாங், தாமான் கோசாஸ் திடலில் நாளை நடைபெறவிருக்கும் “ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்“ நிகழ்வில் சுமார் 2,000 கோழிகளை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) விற்பனைக்கு வைக்கும்.

இந்த விற்பனைத் திட்டத்தில் கலந்து கொள்ளும் பொது மக்கள் சந்தையைவிட மிகக்குறைவாக அதாவது ஒரு கோழி 15.00 வெள்ளி என்ற விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அக்கழகத்தின் விற்பனைப் பிரிவு தலைமை நிர்வாகி முகமது ஃபாஸிர் அப்துல் லத்திப் கூறினார்.

இங்கு விற்பனைக்கு வைக்கப்படும் கோழிகள் 1.8 முதல் 2 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். சந்தையில் RM 20.00 வெள்ளியாக அதன் விலை இருக்கும் நிலையில் இங்கு 15.00 வெள்ளிக்கு மட்டுமே விற்கப்படும் என்று அவர் சொன்னார்.

கோழி தவிர்த்து 1,000 தட்டு முட்டைகள், 1,000 கிலோ இறைச்சி, அரிசி, சமையல் எண்ணெய், காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு விற்பனை செய்யவிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள கம்போங் புக்கிட் நாகா, அல்-பக்ரி பள்ளிவாசல் வளாகத்தில் இன்று நடைபெற்ற ஏசான் மலிவு விற்பனைத் திட்டத்தின் போது சிலாங்கூர் கினியிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் அம்பாங், தாமான் கோசாஸ் திடலில் நாளை நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாநில அரசுன் 23 துணை நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

 


Pengarang :