ECONOMYNATIONALSELANGOR

மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டை வடிவமைப்பதில் சிலாங்கூர் முன்னோடி

கிள்ளான் ஜூலை 3 – இன்று காலை 9.00 மணிக்கு,  கிள்ளான் எக்மார் வைண்டம்  விடுதியில் ”மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாடு வடிவமைத்தல்” என்ற கருத்தரங்கம்  கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்  வரவேற்பு உரையுடன் தொடங்கியது.

மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாடு வடிவமைத்தல் என்ற தலைப்பில் டிஎம் என லிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமாட் அப்துல் காலிட் மற்றும் எலைன்ஸ் வங்கியின்  முன்னாள் பொருளாதார வல்லுநர் மனோகரன் மொட்டையன்  ஆகியோரும் வழங்கிய ஆய்வு கட்டுரைகளுக்கு பின்   அங்கு வந்திருந்த 63 பொது இயக்கங்களின்  விவாதங்களின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட  9 தொகுப்பை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோ, ஜ.செ.க  பொதுச்செயலாளர் அந்தோனி லோக், மற்றும்  சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரியிடம் விளக்கினார்.

ஜ.செ.க  பொதுச் செயலாளர் அந்தோனி லோக், இந்தியர்களின் பிரச்சனைகள்  ஆலயம் தமிழ்ப்பள்ளி மட்டுமல்ல அதையும் தாண்டி பல உண்டு என்பதை  இன்றைய விவாதம்  தெளிவாக எடுத்துரைக்கிறது.  பினாங்கு மற்றும் சிலாங்கூரில் கடந்த 15 ஆண்டுகால  பக்கத்தான் தொடர் ஆட்சியில், மக்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.  இந்திய சமுதாயத்தின்  எதிர்பார்ப்புகள்  மிக நியாயமானவை, இந்தியர்கள்  கௌரவமிக்கவர்கள் எதையும் இனாம் கேட்க வில்லை  அவர்களின் உழைப்புக்கு, அர்ப்பணிப்புகளுக்கு  நிதியான  அங்கீகாரத்தை பெற விரும்புகின்றனர் என்றார்  அவர், அவர்களின் கோரிக்கைகளை  ஒற்றுமையாக முன் வைப்பதில் தான்  தவறிவிடுகின்றனர் என்றார்.

அடுத்து பேசிய சிலாங்கூர்  மந்திரி  புசார் , கடந்த 15 வருடங்களாக  இந்தியர்களிடம்  மிக அணுக்கமாக  பழகி வருவதால்  அவர்களின் எதிர்பார்ப்பையும்  தேவைகளையும்  தாம்  அறிந்து உள்ளதாக குறிப்பிட்டார்.  தானைய தலைவர்கள் 50 வருடங்களில்  தீர்க்க தவறிய விவகாரத்தை  அவர் தனது முதல் தவணையில் தீர்த்து வைத்ததாக  கூறினார்.

பத்துமலை  இந்தியர் கிராம நில பிரச்சனையை தீர்த்து வைத்தது மட்டுமின்றி மற்ற இடங்களிலும்  இந்தியர்களின் நில பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண சிலாங்கூரில்  நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். சிலாங்கூரில்  மேற்கொள்ளப்பட்டுவரும்  சில மக்கள் நல திட்டங்கள் மற்ற மாநிலங்களின் கவனத்தை இழுத்துள்ளததாக குறிப்பிட்டார்.  குறிப்பாக  ஆலயம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் மற்றும்  தொழில் முனைவோர்  ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் ஹிஜ்ரா  கடன் திட்டம்  மற்றும் பொருள்  உதவித் திட்டங்களை குறிப்பிட்டார்.

இன்றைய கருத்தரங்கம் மிக சரியான நேரத்தில் நடத்தப்படுவதற்கு  ஏற்பாட்டாளர்களை  பாராட்டினார். ஆக்ககரமான திட்டங்களை விரைவில் நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய மிக சரியான நேரம்  இது, என  அவர் கூறினார்.

மாலை 4.30 க்கு  கருத்தரங்கம்  நிறைவுபெற, இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு நல்ல பதிலை  சிலாங்கூர் மந்திரி புசார்  வழங்கியதில், கலந்துகொண்ட பேராளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Pengarang :