ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

மாநில திட கழிவுகளை கொட்டும் நிலப்பரப்பு  அளவு  வேகமாக குறைந்து வருவதால்  கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் ஆலைகள் தேவை

ஷா ஆலம், ஜூலை 8 – சிலாங்கூரில் தற்போது வெளியேற்றப்படும் கழிவுகள் விகிதத்தின் அளவானது அதனை  கொட்டி நிரப்புவதற்கான  நிலத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகளில்  பற்றாக்குறை  ஏற்படும் என  ” வேல்ட்வைட் ஹோல்டிங்ஸ்”  நிறுவன பிஎச்டி தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நோராஸ்லினா ஜகாரியா கூறினார்.

இதை உணர்ந்து, திடக்கழிவு மேலாண்மைக்கு பொறுப்பான அரசுக்கு சொந்தமான நிறுவனம், 2014-ல் (கழிவை எரிசக்தியாக WTE) மாற்றுவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வில் இறங்கியது.

“அடுத்த ஆண்டு நாங்கள் மூன்று WTE கழிவை எரிசக்தியாக மற்றும் ஆலைகளின் முதல் கட்டத்தை தொடங்குவோம், அதில் இரண்டு ஜெராம் கழிவு நிலம் மற்றும் தஞ்சோங் டுவா பெலாஸ் கழிவு நிலம் பகுதிகளில் அமையும்.  இது 2025 ஆம் ஆண்டளவில் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது,” என்று அவர் கூறினார்.

இன்று முன்னதாக ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (MBSA) மாநாட்டு மையத்தில் நடைபெற்ற முதல் சிலாங்கூர் திட்ட முன் வெளியீட்டு கருத்தரங்கில் நடைபெற்ற நீடித்த நிலைத்தன்மை மன்ற அமர்வைத் தொடர்ந்து ‘’மீடியா சிலாங்கூரிடம்” நோரஸ்லினா பேசினார்.

இம்மூன்று ஆலைகளும் 4,500 முதல் 5,000 டன்கள் கழிவுகளை தினசரி மாற்றும் திறன் கொண்டவையாக இருப்பதால், அது முடிந்தவுடன், சிலாங்கூர் மலேசியாவில் மிகப்பெரிய கழிவு-மாற்று வசதிகளைக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

“எனவே தற்போது குப்பை கிடங்குகளுக்கு அனுப்பப்படும் 6,500 டன் கழிவுகளில் 80 விழுக்காடு பசுமை தொழில் நுட்பமாக மாற்றப்படும்.

“நாங்கள் ஒரு பொருள் மீட்பு வசதியையும் (MRF) மற்றும் காற்றில்லா செரிமானம் (AD) செயல்முறையையும்  உருவாக்குவோம்” என்று நோராஸ்லினா கூறினார்.

பொருள் மீட்பு வசதி என்பது ஒரு மறுசுழற்சி செயல்முறையாகும், அதே சமயம் காற்றில்லா செரிமானம் என்பது கழிவுகளை நிர்வகிக்க அல்லது எரிபொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

கழிவு-ஆற்றல், பொருள் மீட்பு வசதி மற்றும் காற்றில்லா செரிமானம் ஆகியவை கழிவு  நிலங்களில்  இருப்பதால், சிலாங்கூர் அதன் பூஜ்ஜிய நிகர கார்பன் உமிழ்வு இலக்கை மிக விரைவாக  இலக்கை எட்ட உதவும் என்று அவர் கூறினார்.

நோராஸ்லினாவைத் தவிர, மன்றத்தில் உள்ள மற்ற குழு உறுப்பினர்கள் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் பசுமை தொழில் நுட்பத்திற்கான மாநில நிர்வாக கவுன்சிலர் ஹீ லோய் சியான், ஊராட்சி மன்றம் மற்றும் பொது போக்குவரத்துக்கான மாநில நிர்வாக கவுன்சிலர் இங் ஸீ ஹான், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுக்கான மாநில நிர்வாக கவுன்சிலர் ரோட்ஷியா இஸ்மாயில் மற்றும் கெபாங்சான் மலேசியா பல்கலைக்கழகம் (UKM) சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு (நிலைத்தன்மை) நிறுவன விரிவுரையாளர் பேராசிரியர் ஜாய் ஜாக்குலின் பெரேரா இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.


Pengarang :