Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பாதுகாக்கப்பட்ட காடுகளைத் தகுதி மாற்றும் நடவடிக்கை 1991 முதல் 2006 வரை மேற்கொள்ளப்பட்டது

ஷா ஆலம், ஜூலை 10- புக்கிட் செராக்கா பாதுகாக்கப்பட்ட வனத்தின் நில அந்தஸ்தை மாற்றும் நடவடிக்கை கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாக மாநில வன இலாகா இயக்குநர் டத்தோ அகமது பாட்சில் அப்துல் மாஜிட் கூறினார்.

ஷா ஆலம், யு10 பகுதியில் உள்ள 406.22 ஹெக்டர் பரப்பளவிலான பகுதியும் அதில் அடங்கும் என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் அப்போதைய ஆட்சிக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பின்தேதியிடப்பட்ட ஆர்ஜித அறிக்கை இவ்வாண்டு மே மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டதாக அவர் சொன்னார்.

மாநில அரசின் சட்ட ஆலோசக அலுவலகம் வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இந்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை தகுதி மாற்றம் செய்யும் நடவடிக்கை பொது மக்களின் கருத்தைக் கேட்டறியும் நடவடிக்கையின் வாயிலாக மேற்கொள்ளப்படவில்லை. காரணம், 2011 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில வனச் சட்டத்தின் 11 பிரிவில் திருத்தம் கொண்டு வரப்படுவதறகு முன்னர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும் வனப்பகுதிக்கு மாற்றாக புதிய நிலங்களைக் கொண்டு ஈடுசெய்யும் நடவடிக்கை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் செராக்காவில் 1,298.86 ஹெக்டர் பகுதி இன்னும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் குறைந்த து 30 விழுக்காட்டுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக நிலை நிறுத்தும் கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :