ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வசதி குறைந்தவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்- பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம் ஜூலை 10- வசதி உள்ளவர்கள் உதவி தேவைப்படும் தரப்பினருக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தியாக கடமையே ஆற்றும் அதே வேளையில் அந்த தியாகத்தின் ஒரு பகுதியை வசதி குறைந்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று இன்று கொண்டாடப்படும் ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

நன்றி என்பது ஒரு தனிப்பட்ட மனிதரின் மனப்போக்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல. ஏழைகளுக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் உதவும் நடைமுறையை உள்ளடக்கிய சமூக அம்சமாகவும் அது பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு  நாம் அனைவருக்கும் அவ்வளவு எளிதான ஓர் ஆண்டல்ல. பெருந்தொற்றுக்கு பிந்தைய மீட்சி நாம் எதிர்பார்த்த வகையில் சீராக இருக்கவில்லை. மாறாக, திருப்பங்களும் சவால்களும் நிறைந்த ஒன்றாக உள்ளது என்றார் அவர்.

இந்த சவால்களை உணர்ந்துள்ள காரணத்தால் அரசாங்கம் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. கிஸ் மற்றும் கிஸ் ஐ.டி. திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்துள்ளது என அவர் கூறினார்.

இந்த பிங்காஸ் திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள சுமார் 30,000 வசதி குறைந்தவர்கள் மாதம் 300 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :