ECONOMYNATIONALSUKANKINI

அனைத்துலக போலிங் போட்டி- அரையிறுதிச் சுற்றுக்கு நத்தாஷா, லீ ஜேன் தேர்வு

கோலாலம்பூர், ஜூலை 10- அமெரிக்காவின் அலாபாமாவில் நேற்று நடைபெற்ற அனைத்துலக போலிங் மகளிர் இரட்டையர் பிரிவில் தேசிய விளையாட்டாளர்களான நத்தாஷா ரோஸ்லான் மற்றும் சின் லீ ஜேன் ஜோடி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

நேற்றையப் போட்டியில் பெற்ற வெற்றியின் வழி அந்த உலகக் போட்டியில் தங்கத்தை வெல்வதற்குரிய வாய்ப்பினை அந்த இரட்டையர் பிரகாசமாக்கிக் கொண்டுள்ளனர்.

பெயேர்டோரிக்காவைச் சேர்ந்த தைஷா நரான்ஜோ-பமிலா பெரேஷ் ரிக்கோ ஜோடியை நத்தாஷா- லீ ஜேன் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றது.

இப்போட்டியின் காலிறுதிச் சுற்றில் போலந்தின் டேனிசி பிளெக்கென்சி-சமந்தா கியேன்ர் ஜோடியை 259-144, 194-188 என்ற புள்ளிக் கணக்கில் தேசிய அணி வெற்றி கண்டது.

நாளை நடைபெறவிருக்கும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்கின் மிக்கா குல்ட்பெக்-மாய் ஜிங்ஜர் ஜோடியை நத்தாஷா-லீ ஜேன் அணி எதிர் கொள்ளவிருக்கிறது.

இதனிடையே, ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசிய விளையாட்டாளர்களான முகமது ராபி-திம்மி டான் ஜோடி அமெரிக்காவின் அலெக் கிப்ளிங்கர் –திரேண்ட் மிஷல் ஜோடியிடம் 1-2 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவினர்.


Pengarang :