ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஐ-பிஸ்னஸ் திட்டத்தில் பங்கேற்பீர்- தொழில்முனைவோருக்கு ஹிஜ்ரா அறவாரியம் அழைப்பு

ஷா ஆலம், ஜூலை 13- வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோர் 50,000 வெள்ளி வரையிலான கடனுதவியைப் பெறும் வாய்ப்பை யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் வழங்குகிறது.

இந்த கடனுதவி வாய்ப்பு அனைத்து வர்த்தகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படுவதாக அந்த அறவாரியம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த வர்த்தக  கடனுதவித் திட்டம் தொடர்பான மேல் விபரங்களை www.hijrahselangor.com என்ற  அகப்பக்கம் வாயிலாகவும் மாநிலம் முழுவதும் உள்ள 20 ஹிஜ்ரா கிளைகள் வாயிலாகவும் பெறலாம்.

இந்த கடனுதவித் திட்டத்திற்கு http://mikrokredit.selangor.gov.my/e-hijrah/login   என்ற அகப்பக்கம் மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம் என்று அந்த மாநில அரசின் வர்த்தக கடனுதவி வாரியம் தெரிவித்தது.

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை விரிவு படுத்துவதற்கு ஏதுவாக ஹிஜ்ரா அறவாரியம் 50,000 வெள்ளி வரை கடனுதவி வழங்குகிறது.

தேவையான ஆவணங்களும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளும் இருக்கும் பட்சத்தில் எளிதாகவும் விரைவாகவும் சுமையளிக்காத வகையிலும் கடனுதவியைப் பெற முடியும் என்றும் அவ்வாரியம் கூறியது.

இத்திட்டத்தின் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை 2,299 தொழில்முனைவோர் 965,000 வெள்ளியை கடனுதவியாகப் பெற்றுள்ளனர்.

தொழில்முனைவோருக்கு கடன் வழங்குவதற்கும் ஒரு லட்சம் வெள்ளி வரை வர்த்தகக் கடனுதவி வழங்க வகை செய்யும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் ஏதுவாக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஹிஜ்ரா அறவாரியத்திற்கு மாநில அரசு 12 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.


Pengarang :