ECONOMYMEDIA STATEMENTSELANGOR

இலவச நீர் விநியோகத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வீர்- மந்திரி புசார் வேண்டுகோள்

 ஷா ஆலம், ஜூலை 13 – இலவச நீர் விநியோகத்தைப் பெறுவதற்கு ஏதுவாக டாருள் ஏசான் திட்டத்திற்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்  என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டத்திற்கு இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பம் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். தகுதியானவர்களுக்கு 20 கன மீட்டர் தண்ணீர் வரை இலவசமாக வழங்கப்படும் என்று சொன்னார்.

இந்த திட்டம் வசதி குறைந்தவர்களின் சுமையை குறைப்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறிய அவர், வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதன் மூலம் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் மாநில அரசின் திட்டங்களில் இதுவும் ஒன்றாக விளங்கிறது என்றார்.

இலவச நீருக்கான விண்ணப்ப முறையை ஆயர் சிலாங்கூர்  நிறுவனம் எளிதாக்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையம் வாயிலாக அல்லது வாடிக்கையாளர் சேவை முகப்பிடங்களில் இதற்கான விண்ணப்பங்களை செய்யலாம்  என்று அமிருடின் தனது  பேஸ்புக் பதிவில் கூறினார்.

இணைய விண்ணப்பங்களை  https://www.airselangor.com/residential/skim-air-darul-ehsan/  என்ற அகப்பக்கம் வாயிலாக மேற்கொள்ளலாம்.  விண்ணப்பதாரர்  மலேசிய குடிமகனாகவும் சிலாங்கூர் குடியிருப்பாளராகவும் இருக்க வேண்டும், குடும்ப வருமானம் 4,000 வெள்ளி  மற்றும் அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும், அவர்களின் குடியிருப்பு வளாகம் ஒரு தனிப்பட்ட மீட்டரை கொண்டிருக்க வேண்டும். என்பதோடு ஒவ்வொரு விண்ணப்பதாரரும் ஒரு கணக்கிற்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவார்


Pengarang :