ECONOMYSELANGORSMART SELANGOR

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் 262 மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்

ஷா ஆலம், ஜூலை 28- முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் 262 மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. அவற்றில் சில ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.

மற்ற திட்டங்கள் இன்னும் திட்டமிடல் அளவில் உள்ளதோடு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கேற்ப அவை செயலாக்கம் காணும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, 44 உதவித் திட்டங்களை உள்ளடக்கிய இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் (ஐ.எஸ்.பி.), கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய தரப்பினரை மீட்சிபெறச் செய்வதற்கான இரண்டாவது வாய்ப்பாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஐ.எஸ்.பி. திட்டம் சமூக பொருளாதார சுழல் முறையை வலுப்படுத்துவதோடு பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இத்திட்டங்களின் அமலாக்கம் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மக்களின் சுபிட்சமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க  இயலும் என்பதோடு புதிய வருமானத்திற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தவும் நடப்பு தொழில்நுட்ப புத்தாக்க மாற்றங்களை கையாளவும் இயலும் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று 21,244 கோடி வெள்ளி மதிப்பிலான முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மந்திரி புசார் தாக்கல் செய்தார். அதில் 9,144 கோடி வெள்ளி மாநில மேம்பாட்டிற்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்றார்.


Pengarang :