ECONOMYSELANGOR

2025 க்குள் வருமானம் ஈட்டாத  தண்ணீரின் சராசரி அளவு  25 விழுக்காடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஷா ஆலம், ஜூலை 28: சிலாங்கூரில் உற்பத்தி செய்யப்படும் தண்ணீரில்  வீனாகும் நீரின் சராசரி விகிதம் (NRW) 27.93 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் அது 25 விழுக்காட்டுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி 30,008 கி.மீட்டர் குழாய்களில் 556.14 கிலோமீட்டர் (கி.மீ) நீளம் வெற்றிகரமாக மாற்றப்பட்டது என்று அடிப்படையில்  கணக்கிடப்படுவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“ஒரு நாளைக்கு 230 லிட்டர் தனிநபர் தண்ணீர் நுகர்வு விகிதம் சிலாங்கூரில் உள்ளது, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பரிந்துரையின்படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 165 லிட்டர் நீர் நுகர்வை விட 45 விழுக்காடு அதிகம்.

“இருப்பினும், சிலாங்கூரின் மூல நீர் ஆதாரங்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவை ஆறுகளில் இருந்து எடுக்கப் படுகின்றன,  62 விழுக்காடு நீர் விநியோகமாக பயன்படுத்தப்படுவதற்கு முன் கூடுதல் சுத்திகரிப்பு தேவைப்படுகிறது,” என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டசபையில் முதல் சிலாங்கூர் திட்டத்தை (RS-1) முன்வைக்கும்போது கூறினார்.

ஜூன் 30 அன்று, சிலாங்கூர் நீர் மேலாண்மை எஸ்டிஎன் பிஎச்டி (ஆயர் சிலாங்கூர்) 2021 இல் NRW இல் 27.93 விழுக்காடு பதிவாகியுள்ளதாக அறிவித்தது, இது சிலாங்கூர் நீர் சேவை ஆணையம் நிர்ணயித்த இலக்கை விட 28 விழுக்காடு அதிகம்.

அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுஹைமி கமரால்ஜமான் கூறுகையில், இந்த தொகை ஒரு நாளைக்கு 19.25 கோடி லிட்டர் தண்ணீரை சேமிப்பதற்கு சமம், இதனால் செயல்பாட்டு செலவுகள் மேம்படுகிறது மற்றும் வளங்களின் செயல்திறனும்  மேம்பட்டுள்ளது  என்றார்.


Pengarang :