ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

குழந்தைகள் பராமரிப்பு மையங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை

ஷா ஆலம், ஜூலை 28: வேலை செய்யும் பெண்களின் சுமையை எளிதாக்கும் வகையில் தங்கள் வேலை  இடங்களில் குழந்தை பராமரிப்பு மையங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு கழிவுகளை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

டத்தோ மந்திரி புசார் கூறுகையில், இந்த வசதி அதிகமான பெண்களை தொடர்ந்து வேலையில் இருக்க ஊக்குவிப்பதாகவும், இதனால் 2025 ஆம் ஆண்டுக்குள் பெண்களின்  பங்களிப்பு  75 விழுக்காடு இலக்கை அடைய முடியும் என்று கூறினார்.

“அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு  சிறப்பு அறைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை வழங்குவதைக் கட்டாயப் படுத்துவதுடன், மாநில அரசின் நிறுவனங்கள், துணை நிறுவனங்களின் வழி இது தொடங்கப்படும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் முதல் சிலாங்கூர் திட்டத்தை (ஆர்எஸ்-1) முன்வைக்கும்போது, நிதி மற்றும் திறன் பயிற்சிக்கான அணுகலை அதிகரிப்பதன் மூலம் பெண் தொழில் முனைவோரின் வளர்ச்சியும் வலுப்பெற்றதாக அமிருடின் கூறினார்.

“ஆர்எஸ்-1 மேலும் நெகிழ்வான வேலை ஏற்பாடுகளை வழங்க பொது மற்றும் தனியார் துறை முதலாளிகளை ஊக்குவிக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தும்.


Pengarang :