SEPANG, 6 Ogos — Badang negara Mohammad Aniq Kasdan (kanan), Muhamad Aznil Bidin (kiri) dan Bonnie Bunyau Gustin (depan) sejurus tiba di Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur (KLIA) hari ini. Mohammad Aniq Kasdan dan Muhamad Aznil Bidin membawa pulang pingat Emas menerusi kategori 55 kilogram (kg) dan 61 kg manakala Bonnie Bunyau Gustin meraih pingat Emas pada acara powerlifting kategori lightweight bawah 72kg. Hari ini atlet angkat berat, judo, para olahraga, powerlifting, para ping pong selamat tiba di Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur (KLIA) di sini, selepas mempamerkan aksi cemerlang di Sukan Komanwel Birmingham 2022. –fotoBERNAMA (2022) HAK CIPTA TERPELIHARA

காமன்வெல்த் 2022- வெற்றியுடன் நாடு திரும்பிய விளையாட்டாளர்களுக்கு கோலாகல வரவேற்பு

சிப்பாங், ஆக 7- பெர்மிங்ஹாம் காமவெல்த் போட்டியில் நாட்டின் பெயரை மிளரச் செய்த விளையாட்டாளர்கள் நேற்று இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கோலகலமாக வரவேற்கப்பட்டனர்.

நேற்று தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பிய விளையாட்டார்களில் பளு தூக்கும் விளையாட்டாளர்களான முகமது ஹனிக் கஸ்டாம், முகமது அஸ்னில் பிடின் மற்றும் பவர்லிஃப்டிங் போட்டியின் வெற்றியாளர்  போனி புன்யாவ் குஸ்டினும் அடங்குவர்.

இவர்களை குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகள் பூச்செண்டு வழங்கி உற்சாக வரவேற்பை நல்கினர்.

இவர்கள் தவிர்த்து இப்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பளு தூக்கும் விளையாட்டாளர் முகமது எர்டி இடாயாட், ஜூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற அமிர் டேனியல் அப்துல் மஜிட் மற்றும் இதர விளையாட்டாளர்களும் நேற்று நாடு திரும்பினர்.

மலேசிய பளு தூக்கும் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆயோப் ரஹ்மாட்டும் விளையட்டாளர்களை வரவேற்க நேற்று விமான நிலையம் வந்திருந்தார்.


Pengarang :