ECONOMY

சுங்கை காண்டீஸ் தொகுதி ஏற்பாட்டில் பட்டம் விடும் போட்டி- 600 பேர் பங்கேற்பு

கிள்ளான், ஆக 7- சுங்கை காண்டீஸ் தொகுதி ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற  பட்டம் விடும் போட்டியில் 600க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் மாநிலத்திலிருந்து மட்டுமின்றி பேராக் போன்ற இதர மாநிலங்களிலிருந்தும் 100 குழுக்கள் வரை பங்கேற்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

இரண்டாவது முறையாக நடத்தப்படும் இந்த போட்டியில் அதிகமானோர் கலந்து கொண்டு பல்வேறு வடிவங்களைக் கொண்ட 600க்கும் மேற்பட்ட பட்டங்களை தங்கள் திறமைக்கேற்றவாறு வானில் பறக்கவிட்டனர் என்று அவர் சொன்னார்.

நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பட்டங்கள் வானில் வட்டமடிக்க வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனையாகும். அவை வானில் இருக்கும் நேரத்தை போட்டியின் நடுவர்கள் கணக்கெடுப்பர் என்றார் அவர்.

இங்குள்ள தாமான் அண்டாலாஸ் திடலில் நடைபெற்ற இந்த பட்டம் விடும் போட்டிக்கு வருகை புரிந்தப் பின்னர் சிலாங்கூர் கினியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு 1,500 வெள்ளியும் இரண்டாம் இடத்தைப் பெறுவோருக்கு 750 வெள்ளியும் மூன்றாம் இடம் பிடிப்போருக்கு 500 வெள்ளியும் பரிசாக வழங்கப்படும்.


Pengarang :