ECONOMYMEDIA STATEMENT

வன்முறையாளர்களுக்கு  எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க கெ அடிலான் கட்சி வற்புறுத்துகிறது.

கிள்ளான் ஆகஸ்ட் 6 – மஇகா இளைஞர்கள் பொதுமக்களுக்கு எதிரான வன்முறை  தாக்குதல் குற்றத்திற்கு எதிராக பிடிஆர்எம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோத்தா ராஜா கிளையின் கெ அடிலான் கட்சியின் தலைவரும், கிள்ளான்  செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். குணராஜ் ஜோர்ஜ்  கேட்டுக் கொண்டார்.

நேற்று மஇகா இளைஞர் ஒரு பொது இடத்தில் ஒருவரை ஆயுதம் கொண்டு காயப்படுத்திய வீடியோ கிளிப் வைரலானது. பாதிக்கப்பட்டவர் அளித்த எம்ஏசிசி அறிக்கை மீதான அதிருப்தி  இதற்குக் காரணம்  என்று  கூறியுள்ளார்..

பொது மக்கள் , மற்றும் நாட்டு  நன்மைக் நோக்கிய பொது மக்கள் நிலைப்பாட்டின் மீது, தனி நபர் கொண்டுள்ள  பகைமையால் இது போன்ற பொது வெளியில் வன்முறை குற்றங்கள் செய்யக் கூடாது. மலேசிய போலீசார் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் இந்த விஷயம் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும்.

இதுபோன்ற வெளிப்படையான வன்முறை குற்றங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையும் ஏற்படுத்தியுள்ளது. யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை அனைத்து தரப்பினருக்கும் பாடமாகச் செயல்பட, குற்றவாளிகளுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது ஊழலை தவிர்க்க, ஆர்வமுள்ள மற்றும் செல்வாக்கு மிக்கதரப்பினரின் தலையீடு இல்லாமல்  வெளிப்படையான  விசாரணையை மலேசிய போலீஸ் துறை  நடத்த வேண்டும்.

எந்தவொரு அச்சுறுத்தலும் இன்றி மக்கள் பாதுகாப்பான நிலையில் வாழ்வதற்கு பொது பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று என்பதை நான் வலியுறுத்துகிறேன்.   குற்றமிழைத்த  அவர்  காவல்துறை  அறிக்கை  உருவாக்கி  சரியான சேனல்களைப் பயன்படுத்த வேண்டும்,  மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் எம்ஏசிசி அறிக்கையின் மீது  அதிருப்தியை வெளிப்படுத்த  நீதிமன்றத்தை  ஒரு      இடமாக பயன்படுத்த   வேண்டும்.

சட்ட விதிகளின்  அடிப்படையில் ஒவ்வொரு புகாரையும் அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக சிலாங்கூர் முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியும், கிள்ளான்  செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  டாக்டர். குணராஜ் ஜோர்ஜ்  கூறினார்.


Pengarang :