ECONOMYSELANGOR

ஷா ஆலம் ஐ-சிட்டியில் மாபெக்ஸ் 2022 சொத்துடைமை கண்காட்சி- 2,300 கட்டுப்படி விலை வீடுகளை வாங்க வாய்ப்பு

ஷா ஆலம், ஆக 13- ஷா ஆலம்/கோல சிலாங்கூர் நிலையிலான மலேசிய சொத்துடைமை மற்றும் வீடமைப்பு கண்காட்சி 2022 (மாபெக்ஸ்) சென்ட்ரல் ஐ-சிட்டியில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 2,300 கட்டுப்படி விலை வீடுகளை வாங்குவதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்கு கிட்டியுள்ளது.

கோல லங்காட் மற்றும் சிப்பாங் உள்ளிட்ட பகுதிகளில் 100,000 வெள்ளிக்கும் கூடுதலான விலையில் கட்டுப்படி விலை வீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக மாபெக்ஸ் தலைவர் லு சீ யோங் கூறினார்.

இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் கட்டுப்படி விலை வீடுகளை விற்பனைக்கு வைத்துள்ளது. இது தவிர பாங்கியில் 315,000 வெள்ளி விலை அப்பார்ட்மெண்ட் வீடுகளை 10 விழுக்காட்டு தள்ளுபடி விலையில் விற்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த கண்காட்சியில் கட்டுப்படி விலை வீடுகளுக்கு மட்டுமின்றி ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள், தரை வீடுகள், நகர வீடுகளுக்கும் கடனுதவி தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு அனுகூலங்களை ஏற்படுத்தி தருகிறோம் என்றார் அவர்.

இந்த ஷா ஆலம்/கோல சிலாங்கூர் மாபெக்ஸ் கண்காட்சி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 17 வீடமைப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


Pengarang :