ECONOMYMEDIA STATEMENT

டிரெய்லர் லோரி 50 மீட்டர் பள்ளத்தில் விழுந்தது- ஓட்டுநர் சண்முகநாதன் பலி

கிரீக், ஆக 14- காங்கிரீட் ஏற்றியிருந்த டிரெய்லர் லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 50 மீட்டர் பள்ளத்தில் விழுந்த சம்பவத்தில் அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் பெங்காலான் உலு, கிளியான் இந்தான் அருகே உள்ள கூனோங் பாக்கு பகுதியில் இன்று காலை 9.52 மணியளவில் நிகழ்ந்தது.

அந்த லாரியின் ஓட்டுநரான வீ. சண்முகநாதன் (வயது 48) உடலின் பல பாகங்களில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உத்துசான் மலேசிய செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தாங்கள் காலை 9.52 மணியளவில் தகவல் பெற்றதாக பெங்காலான் உலு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஷியாய்ருள் அன்வார் அப்துல் அஸாம் கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது டிரெய்லர் லோரி ஒன்று 50 மீட்டர் பள்ளத்தில் விழுந்து கிடந்த தைக் கண்டோம். ஓட்டுநர் என நம்பப்படும் ஆடவர் அருகிலுள்ள கால்வாயில் கிடந்தார் என்று அவர் தெரிவித்தார்.

சுயநினைவின்றி காணப்பட்ட அந்த ஆடவரை சோதித்த மருத்துவ பணியாளர்கள் அவர் இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர் என்று அவர் மேலும் சொன்னார்.

Pengarang :