ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எஸ்.ஆர்.சி. ஊழல் வழக்கில் புதிய ஆதாரங்கள்- நஜிப்பின் மனு மீதான விசாரணை தொடங்கியது

புத்ரா ஜெயா, ஆக 15- தமக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்படுவதற்கு காரணமான எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல்  வழக்கை தள்ளுபடி செய்வதற்காக புதிய ஆதாரங்களை விசாரணையில் சேர்க்க டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் செய்து கொண்ட மனுவை தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான ஐவரடங்கிய அமர்வு இன்று விசாரிக்கத் தொடங்கியது.

இந்த வழக்கு இங்குள்ள கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று காலை 9.48 மணிக்கு தொடங்கியது.

சபா மற்றும் சரவா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அபாங் இஸ்கந்தார் அபாங் ஹஷிம் மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ நளினி பத்மநாபன், டத்தோ மேரி லிம் தியான் சுவான், டத்தோ முகமது ஜபிடின் முகமது டியா ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகும் இதர நீதிபதிகளாவர்.

எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் ஊழல் வழக்கை மறு விசாரணை செய்வதற்கு ஏதுவாக புதிய ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு நஜிப் தரப்பு செய்து கொண்ட மனு நீதிமன்றம் இன்று முதலில் விசாரிக்கவுள்ளது.


Pengarang :