ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

குவாங் மற்றும் பத்துத் தீகா வாழ்பவர்கள் நாளை இலவசச் சுகாதாரப் பரிசோதனையில் பங்கேற்க அழைக்கப் படுகிறார்கள் – மந்திரி புசார்

ஷா ஆலம், ஆகஸ்ட் 20: நாளை இரண்டு இடங்களில் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனையில் பங்கு  கொள்ளுமாறு  குவாங் மற்றும்  பத்துத் தீகா  வாழும்  பொதுமக்களுக்கு   டத்தோ மந்திரி புசார் அழைப்பு விடுத்துள்ளார்.

டேவான் கம்போங் பெர்மாத்தா, குண்டாங் சட்டமன்றம் குவாங் மற்றும் டேவான் ஹெரிட்டியர் ஹால், செக்சன் 24 (பத்துத் தீகா சட்டமன்றம்) ஆகிய இடங்களில் மாநில அரசின் இலவசச் சுகாதாரப் பரிசோதனை  நடைபெறும்.

செலங்கா  செயலி பயன்பாட்டின் மூலம் சுகாதாரப் பரிசோதனைகளுக்கு விண்ணப்பிக்குமாறு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பேஸ்புக் வழியாகக் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டினார்.

தகவல் கிராபிக்ஸ் பகிர்வு மூலம், அதே நிகழ்ச்சி இன்று இரண்டு இடங்களில் நடைபெற்றது, அதாவது தாமான் ஏசான் பல்நோக்கு மண்டபம், (புக்கிட் லஞ்சன் சட்டமன்றம்) மற்றும் இவென்ட் ஹால் ஏட்ரியல் மால், பெட்டாலிங் ஜெயா (பண்டார் உத்தாமா சட்டமன்றம்).

சிலாங்கூர் சாரிங் வெற்றிபெற மாநில அரசு RM34 லட்சம் ஒதுக்குகிறது, இது குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை கொண்ட 39,000 சிறப்பு குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும்.

செப்டம்பர் 4 ஆம் தேதி வரை இந்த திட்டத்தில் உடல் பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், கண், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய், மலம் இரத்தம் அல்லது பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் சோதனைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.


Pengarang :