ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

கிள்ளான் வட்டாரத்தில் நாளை முதல் புதன் வரை கடல் பெருக்கு அபாயம்

ஷா ஆலம், செப் 10- நாளை தொடங்கி வரும் புதன்கிழமை வரை காலை 6.00  மணி முதல் காலை 8.00 மணி வரை கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிள்ளான் வட்டார மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழையுடன் ஒரே நேரத்தில் நிகழும் இந்த கடல் பெருக்கு காரணமாக வெள்ளம் மற்றும் தடுப்பணை உடையக்கூடிய அபாயம் உள்ளதாக கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு கூறியது.

வானிலை மற்றும் கூடுதல் வழிகாட்டுதலை சம்பந்தப்பட்டத் தரப்பினரிடமிருந்து பெறும்படி  வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கிள்ளான் மாவட்ட பேரிடர் செயல்பாட்டு அறை நாளை ஞாயிற்றுக்கிழமை  முதல் செயல்படும்  என்று பேரிடர் மேலாண்மைக் குழு  முகநூல் வாயிலாக வெளியிட்ட   அறிக்கையில் தெரிவித்தது.

இதே போன்ற கடல் பெருக்கு வரும் செப்டம்பர் 27 முதல் 29 வரை காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நிகழும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. போர்ட் கிள்ளான் பகுதியில்  5.5 மீட்டர் வரை அலைகள் உயரும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது

Pengarang :