ECONOMYNATIONAL

வாரம் 20,000 வாக்காளர்களை அணுக கெஅடிலான் திட்டம்

ஷா ஆலம், செப் 14- எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்று இன்னும் முடிவெடுக்காமலிருக்கும் வாக்காளர்களை இலக்காக கொண்டு கெஅடிலான் கட்சி தீவிரப் பிரசார நடவடிக்கையை மேற்கொள்ளவுள்து.

வாரம் 20,000 வாக்காளர்களை அணுகி கெஅடிலான் கட்சியின் பக்கம் அவர்களின் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபடவுள்ளதாக கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் இந்த பிரசார திட்டத்தில் 600 கட்சிப் பொறுப்பாளர்கள் பங்கேற்பர் என்று அவர் சொன்னார். நாட்டில் மதில் மேல் பூனைகளாக இருக்கும் வாக்காளர்களின் ஆதரவு சிறிது சிறிதாக மாறி வருவதை காண முடிகிறது என்று தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர # ஆயோமலேசியா எனும் பயணத் தொடரை கட்சியின் உதவித் தலைவர் நூருள் இசா அன்வாருடன் இணைந்து வரும் 17 ஆம் தேதி ஜோகூரிலும் மறுநாள் மலாக்காவிலும் நடத்தவுள்ளதாக அவர் சொன்னார்.

சிம்பாங் ரெங்காம் மற்றும் ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதிகளில் வரும் 17 ஆம் தேதியும் மறுநாள் தங்கா பத்து மற்றும் லேடாங் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்த பிரசாரக் கூட்டம் நடைபெறும் என்றார் அவர்.

பாஸ், அம்னோ, பெர்சத்துவை ஆட்டங் காணச் செய்யும் வலுவான அடித்தளத்தை நாம் அமைத்து வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :