ECONOMYSELANGOR

தீபாவளியை முன்னிட்டு பி40 இந்திய குடும்பங்களுக்கு ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்படும்

ஷா ஆலம், செப் 14: 2008 முதல் இந்தியர்களுக்கு உணவு கூடைகளை விநியோகிக்கிறோம். நான் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆனதும், பி40 குழுவில் உள்ள இந்தியர்களுக்கு தீபாவளி கொண்டாட்டத்திற்கான செலவுகளின் சுமையை எளிதாக்கும் வகையில் உணவு கூடையை ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளாக வழங்கினோம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட 2 லட்சம் இந்திய குடும்பங்களுக்கு 20 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்படும் மற்றும் ஒரு குடும்பம் RM100 பெறலாம் என்றார்.

 பற்றுச் சீட்டுகள் இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கி மக்களுக்கு விநியோகிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இந்த RM100 பற்றுச் சீட்டு உதவியைப் பெற  உங்கள் பகுதி மாநில சட்டமன்ற சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஜோம் ஷாப்பிங் ராயா என்பது குறைந்த வருமானம் பெறும் குழுக்களைக் குறிவைத்து, அந்தந்த பண்டிகைகளுக்கு ஏற்ப மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நீண்ட கால முயற்சியாக அறிமுகப் படுத்தப் பட்டது என்று அவர் கூறினார்.


Pengarang :