ஷா ஆலம்,செப் 18 ; ரிக்டர் அளவில் 6.6 எனப் பதிவான நிலநடுக்கம் தைவானை இன்று பிற்பகல் 2.44 மணியளவில் தாக்கியது.
தைவான் நாட்டின் சியாய் பகுதியின் தென்கிழக்கே 75 கிலோ மீட்டரில் இந்நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.
இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று தனது முகநூல் பதில் அத்துறை தெரிவித்தது.
தைவான் நாட்டின் அதே பகுதியில் ரிக்டர் அளவில் 6.5 முதல் 5.1 வரை பதிவான பல நிலநடுக்கங்கள் நேற்று முதல் பதிவாகி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.