ECONOMYMEDIA STATEMENT

சக மாணவர்களை பகடிவதை செய்ததாக 9 மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

கெமாமான், செப் 19- சக மாணவர்கள் மூவருக்கு காயம் ஏற்படும் அளவுக்கு பகடிவதை செய்ததாக இங்குள்ள இடைநிலை உறைவிடப் பள்ளி ஒன்றில் பயிலும் ஒன்பது மாணவர்கள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் தெங்கு எலியானா துவான் கமாருஸமான் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 16 வயது நிரம்பிய அந்த ஒன்பது மாணவர்களும் மறுத்து விசாரணை கோரினர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அந்த இடைநிலைப்பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியில் 15 வயதுடைய மூன்று மாணவர்களை அடித்தும் உதைத்தும் துன்புறுத்தியதாக அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை, கூடுதல் பட்சம் 2,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் நோர் அஸ்ஹானி வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் அக்மால் வாஹிடா அப்துல் ஹலிம் ஆஜராகியுள்ளார்.


Pengarang :