ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கனரக வாகன விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் அலட்சியப் போக்கே காரணம்- புக்கிட் அமான் விளக்கம்

கோலாலம்பூர், அக் 5- நாட்டில் நிகழும் கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கு ஒட்டுநர்களின அலட்சியப் போக்கே காரணம் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறியுள்ளது.

இதற்கு சான்றாக, நாட்டில் நிகழ்ந்த கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துகளையும் அது உதாரணம் காட்டியுள்ளது.

சம்பவம் 1- கடந்த ஜனவரி மாதம் கிளந்தான், கோத்தா பாரு ஜாலான் செமர்லாங் சாலை சமிக்ஞை விளக்கில் சிமெண்ட் கலவை லோரி ஒன்று காரை மோதியதில்  பெண்மணி ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவம் 2- கடந்த மே மாதம் வடக்கு- தெற்று நெடுஞ்சாலையின் 245.2வது கிலோ மீட்டரில் கோல கங்சார் அருகே மோசாய்க் சலவைக் கற்களை ஏற்றியிருந்த லோரி கார் ஒன்றை மோதியதில் அதில் பயணம் செய்த ஐந்து மாணவர்கள் கருகி மாண்டனர்.

சம்பவம் 3- கடந்த ஜூலை மாதம் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 227.1 கிலோ மீட்டரில் ஈப்போ அருகே நிகழ்ந்த ஏழு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிழந்தனர்.

இந்த மூன்று விபத்துகளுக்கும் தொழில்நுட்ப கோளாறு அதாவது பிரேக் செயல்படாதது காரணமாக இருந்துள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்டு 7 முதல் 17 ஆம் தேதி வரை கனரக வாகனங்கள சம்பந்தப்பட்ட 10 மரண விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அந்த விபத்துகளுக்கு வழக்கம் போல் பிரேக் செயலிழப்பு காரணமாக கூறப்பட்டது.

இந்த விபத்துகளுக்கு பெரும்பாலும் பிரேக் செயலிழப்பு காரணமாக கூறப்பட்டாலும், அலட்சியம் மற்றும் அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது போன்ற இதர உண்மையான காரணங்களை  மறைப்பதற்காக இந்த பிரேக் பழுதை சில தரப்பினர் கருவியாக பயன்படுத்துகின்றனர் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


Pengarang :