Datuk Bandar Majlis Bandaraya Subang Jaya, Dato’ Johary Anuar berucap ketika bengkel pelan strategik operasi bantuan bencana sebagai persiapan menghadapi monsun Timur Laut 2022 di Dewan Serbaguna USJ 7, Subang Jaya pada 5 Oktober 2022. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENT

பருவநிலை மாற்றம்- எம்.பி.எஸ்.ஜே. பகுதியில் ஆபத்து மிகுந்த 35 இடங்கள் அடையாளம் காணப்பட்டன

சுபாங் ஜெயா, அக் 5- பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளப் பேரிடரில் பாதிக்கும் சாத்தியம் உள்ள 28 சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இம்மாதம் மத்தியில் தொடங்கி வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் அந்த இயற்கை பேரிடரின் போது நிலச்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள ஏழு இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த ஊராட்சி மன்றம் கூறியது.

பேரிடர் ஏற்படும் சமயத்தில் விரைந்து உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக அப்பகுதிகள் யாவும் ஜி.ஐ.எஸ். எனப்படும் புவியியல் தகவல் முறையில் உள்ளிடப்பட்டுள்ளதாக மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

இதன் மூலம் வெள்ளம், நிலச் சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

உதாரணத்திற்கு கம்போங் ஸ்ரீ அமானில் வெள்ளம் ஏற்பட்டால் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள தற்காலிக நிவாரண மையம் எது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள இயலும் என அவர் சொன்னார்.

இன்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஜே. பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற பேரிடர் உதவிப் பயிற்சிப் பட்டறையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாள்ர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்,

சமூக பிரதிநிகள், சீருடை உறுப்பினர்கள், அரசு சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட்ட 150 பேர் இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.


Pengarang :