ECONOMY

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 22 ஆக குறைந்துள்ளது

ஜோகூர் பாரு, 6 அக்: ஜோகூரில் உள்ள தற்காலிக  தங்குமிடத்திற்கு (பிபிஎஸ்) மாற்றப்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நேற்று காலை 54 பேருடன் ஒப்பிடும்போது மாலை 4 மணி நிலவரப்படி 22 பேராகக் குறைந்துள்ளது.

பொந்தியானில் தேசிய வகை மெலாயு  ராயா பள்ளியில் உள்ள பிபிஎஸ் பிற்பகல்மணிக்கு மூடப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு (JPBD) ஒரு அறிக்கையில் தெரிவித்தது

JPBD இன் கூற்றுப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட தேசிய வகை மெலாயு ராயா, கம்போங் ஸ்ரீ கம்புட், கம்போங் பாயா எம்புன், கம்போங் மெலாயு ராயா மற்றும் பொந்தியானில் உள்ள கம்போங் ஸ்ரீ மெனந்தி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தங்குமிடமாக மாறியது.

இதற்கிடையில், குளுவாங்கில் உள்ள பிபிஎஸ் தேசிய வகை சுங்கை லினாவ் பள்ளி, கம்போங் சுங்கை லினாவில் 22 பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

“இங்கு தெப்ராவில் உள்ள கம்போங் பாயா கெனங்கனில் இன்று காலை 8.50 மணிக்கு தொடங்கிய திடீர் வெள்ளம் வடியத் தொடங்கியது. சுமார் 30 வீடுகளை பாதித்த சம்பவம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் விளைவாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது, ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Pengarang :