ECONOMYNATIONAL

பி-ஹெய்லிங் ஓட்டுநர்கள் இனி சொக்சோ சந்தா செலுத்த செய்ய வேண்டும்

கோலாலம்பூர், அக்டோபர் 7 – அனைத்து பி-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மற்றும் ரைடர்கள் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) கீழ் சுய வேலைவாய்ப்பு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSPS) கட்டாயம் பதிய வேண்டும் என்று டேவான் ராக்யாட் நேற்று தெரிவித்தது.

போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங், அவர்கள் தொழிற்கல்வி உரிமம் பெறுவதற்கு சொக்சோ சந்தா ஒரு முன் நிபந்தனையாக மாற்றப்படும், அதுவும் கட்டாயமாக்கப்படும் என்றார்.

பி-ஹெய்லிங் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வலை அமைப்பு இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக வீ கா சியோங் கூறினார்.

“ஒரு விபத்து நிகழும் போது, குறைந்தபட்சம் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள், குறைந்தபட்சம் நாங்கள் உதவ முடியும்,” என்று அவர் கூறினார்.

ஒரு தொடக்கமாக, அனைத்து பி-ஹெய்லிங் நிறுவனங்களும் ஒவ்வொரு ஓட்டுனர் மற்றும் பி-ஹெய்லிங் தொழிலாளிக்கு ஒரு மாதத்திற்கு RM13.10 சொக்சோ சந்தா விதிக்க வேண்டும் அல்லது வருடத்திற்கு RM157.20 ஆக மொத்தம் RM157.20 என்ற நிபந்தனையை அரசாங்கம் விதிக்கும், இதில் 80 விழுக்காடு அரசு மற்றும் மீதமுள்ளவை பி-ஹெய்லிங் தொழிலாளர்கள் செலுத்துவார்கள் என்று என்று அவர் கூறினார்.

டேவான் ராக்யாட் அமர்வு இன்று மீண்டும் நடைபெறும்.


Pengarang :