ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2023 ஆம் ஆண்டு  பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு

ஷா ஆலம்  அக்  7 ;-  நாடு 15வது பொதுத் தேர்தலுக்கு  காலடி எடுத்து வைக்கும் முன் சமர்பிக்கப்படும் பட்ஜெட் என்பதால்  மக்கள் அதிக  எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆனால், சட்டியில் இருந்தால் தானே  அகப்பையில் வரும் என்னும் நம் முன்னோர் மொழிக்கு ஏற்ப  நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் இன்று டேவான் ராக்யாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  தாக்கல் செய்திருந்தார்.

எப்போதும்  நடப்பது போல்  அதிகமாக  ஒதுக்கீடுகளை பெறும்  கல்விக்கு  இவ்வாண்டு என்ன கொடுக்கப் பட்டுள்ளது  என்பதை வைத்து  மற்றவை எப்படி இருக்கும் என தீர்மானிக்கலாம் .

ஆரம்ப பள்ளி உதவி ஒதுக்கீடு

• பெற்றோரின் வருமான வரம்பை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் உதவித் தொகை வெ.100 இலிருந்து 150 ஆக உயர்த்தப்படுகிறது.

சத்துணவுத் திட்டம்

• தினசரி  800,000 மாணவர்கள்  ஊட்டச்சத்து உள்ள உணவு பெறுவதை உறுதிப்படுத்த 77.7 கோடி வெள்ளி ஒதுக்கீடு

பள்ளி பராமரிப்பு மற்றும் பழுது

• பள்ளிகளைப் பராமரிக்கவும் பழுது பார்க்கவும் 110 கோடி வெள்ளி ஒதுக்கீடு

உபகாரச் சம்பளம் மற்றும் கல்விக் கடன்கள்

• உபகாரச் சம்பளம் மற்றும் கல்விக் கடன்களை வழங்குவதற்காக 380 கோடி வெள்ளி ஒதுக்கீடு

தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (டி.வி.இ.டி.) திட்டம்

• தேசிய டி.இ.வி.டி. மன்றம் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த  670  கோடி வெள்ளி ஒதுக்கீடு

பி.டி.பி.டி.என். கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்களிப்பு

• குறிப்பாக முதல் நிலையில் இளங்கலை பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும்  கடனைத் திரும்பச் செலுத்துவதிலிருந்து விலக்களிப்பு


Pengarang :