ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி ஜெராம் தொகுதியில் 1,000 பேர் வரை பயன்

கோல சிலாங்கூர்,அக் 11– ஜெலாஜா  ஏசான் ராக்யாட்  மலிவு விற்பனைத் திட்டம் கடந்த மாதம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து ஜெராம்  சட்டமன்றத் தொகுதியிலுள்ள  1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர். இதுவரை நான்கு இடங்களில் அடிப்படை பொருட்களை மலிவாக விற்பனை செய்யும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் நக்முடீன் ஹுசைன் கூறினார்.

அடுத்தக் கட்டமாக எட்டு இடங்களில் குறிப்பாக, குறைந்த வருமானம் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த மலிவு விற்பனையை ஏற்பாடு செய்வோம் என அவர் சொன்னார். மலிவு விற்பனை நடைபெறவுள்ள இடங்களில் சுங்கை செம்பிலாங், தம்பாக் ஜாவா, பெல்டா புக்கிட் செராக்கா மற்றும் சிம்பாங் தீகா ஜெராம் ஆகியவையும் அடங்கும்.

எந்தவொரு குடியிருப்பாளரும் இந்த வாய்ப்பை நழுவவிடாத வகையில் மலிவு விற்பனை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார். இங்குள்ள டேவான் எம்.டி.கே.எஸ் டேசா கோல்பீல்ஸ் பகுதியில் மலிவு விற்பனைத் திட்டத்தை ஆய்வு செய்த பின்னர் அவர் இதனைச் சொன்னார்.

இத்திட்டம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், குடியிருப்பாளர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாகவும் பொருள்களை வாங்க அவர்கள் அதிகாலையில் வரிசையில் நிற்கத் தயாராக இருப்பது அவர்களுக்கு உண்மையிலே உதவி தேவை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது என்றும் கூறினார்.

இப்போது பொருளாதாரமும் மோசமாக உள்ளது. தங்கள் குடும்பங்களை கவனிக்க அவர்கள் சிக்கனமாக செலவிட வேண்டியுள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்த திட்டத்தை தொடர முயற்சிப்போம் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :