ECONOMYMEDIA STATEMENTNATIONAL

குப்பை அழிப்பு பணியை எளிதாக மேற்கொள்ள திடக்கழிவுகளைத் தரம் பிரிப்பீர்- கே.டி.இ.பி.டபள்யு.எம். வேண்டுகோள்

ஷா ஆலம், அக் 12- கழிவுப் பொருள் அழிப்பு பணிகளை எளிதாக மேற்காள்வதற்கு ஏதுவாக வீட்டில் சேரும் ஈரமான மற்றும் உலர்ந்த குப்பைகளை தனித் தனியாக பிரிக்கும்படி கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேமெஜ்மெண்ட் நிறுவனம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் வாயிலாக குப்பை அழிப்பு மையங்களில் சேரும் கழிவுப் பொருள்களின் அளவைக் குறைக்க முடியும் என்று மாநிலத்தில் குப்பை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள அந்நிறுவனம் கூறியது.

குப்பை அழிப்பு மையங்களில் இரசாயன மாசுபாடு ஏற்படுவதற்கு பலவீனமான திடக்கழிவுகளே காரணமாக உள்ளதை சுட்டிக்காட்டிய அந்நிறுவனம், குப்பைகளை தரம் பிரிக்கும் நடவடிக்கையின் மூலம் காற்று மற்றும் நீர் மாசுபாட்டையும் குறைக்க முடியும் என்றது.

குப்பைகளைத் தரம் பிரிப்பது ஒரு நல்ல பழக்கம் என நம்மில் பலர் கருதுகின்றனர். ஆனால், அவ்வாறு செய்வது தங்களின் கடமை என்று அவர்கள் உணர்வதில்லை என்றும் அது குறிப்பிட்டது.

இவ்வாண்டில் அகற்றப்படும் குப்பைகளின் அளவு சுமார் 39,936 டன்னை எட்டும் என்று மலேசியாவில் குப்பைகளை அகற்றுவது தொடர்பான தரவுகள் கூறியுள்ளதையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியது.


Pengarang :