Exco Pembangunan Usahawan, Rodziah Ismail bergambar bersama penerima Pembiayaan Skim Hijrah Selangor sempane Jelajah Selangor Penyayang 2022 di Datran Pantai Morib, Kuala Langat pada 25 Jun 2022. Foto HAFIZ OTHMAN
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கடனை செலுத்துவதில் சிக்கலை எதிர்நோக்கும் வணிகர்களுக்கு உதவ ஹிஜ்ரா மாற்றுத் திட்டம் 

  1. ஷா ஆலம், அக் 12- நிதி நெருக்கடி காரணமாக கடனைத் திரும்பச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கும் தொழில்முனைவோருக்கு உதவ யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் கடன் மீட்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்த மீட்சித் திட்டத்தின் வாயிலாக தொழில்முனைவோர் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அட்டவணையை மாற்றியமைக்க முடியும் என்று அந்த வர்த்தக கடனுதவி அமைப்பு கூறியது.

கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான  அட்டவணையை மாற்றியமைப்பதற்கு ஏதுவாக கடன் மீட்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் உங்களுக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம்.

இதன் தொடர்பான மேல் விபரங்களுக்கு மாநிலம் முழுவதும் செயல்படும் 20 ஹிஜ்ரா கிளைகளின் கடன் வசூலிப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் என அந்த அறவாரியம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

அதே சமயம், எந்த தங்கு தடையுமின்றி கடனை சீராக திருப்பிச் செலுத்தி வரும் தொழில் முனைவோருக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அது தெரிவித்தது.

 


Pengarang :