ECONOMYSELANGOR

மலிவு விற்பனையில்  அடிப்படைப் பொருட்கள் நாளை மேலும் ஒன்பது இடங்களில்

ஷா ஆலம், 17 அக்: மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அடிப்படை பொருட்களின்  மலிவு விற்பனை நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒன்பது இடங்களில் நடைபெறும்.

ஏசான் ரக்யாட் விற்பனை திட்டம் பாலாய் ராயா பாரிட் 11 தீமோர் (சபாக் சட்டமன்றம்), இரவு சந்தை தளம், பெஸ்தாரி ஜெயா (ஈஜோக்), இரவு சந்தை தளம், தாமான் ஆலம் ஜெயா (ஜெராம்) மற்றும் கம்போங் நஹ்ஹோடா (சுங்கை துவா) ஆகிய இடங்களில் நடைபெறும்.

மேலும், கம்போங் பெர்விரா ஜெயாவில் உள்ள  டேவான் எம்பிஏஜே (பாண்டன் இண்டா), LC700 பாண்டன் பெர்டானா (தெராத்தாய்), பண்டார் தாசிக் கெசுமா (செமினி), பங்சாபுரி சீ பார்க் (கம்போங் துங்கு) மற்றும் இரவு சந்தை தளம் (சுங்கை கண்டிஸ்) ஆகியவற்றிலும் இத்திட்டம் நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் நடுத்தர கோழி 10.00 வெள்ளிக்கும்,  பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மற்றும் செலாயாங் மீன் ஒரு  பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5  கிலோ போத்தல் சமையல் எண்ணெய் 25 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி  10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 160 இடங்களில் கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி வரை இந்த மலிவு விற்பனை நடைபெறுகிறது.

ஜெலாஜா ஏசான் ரக்யாட் விற்பனை பற்றிய தகவலை https://linktr.ee/myPKPS இணைப்பைப் பார்வையிடுவதன் மூலமும் பெறலாம்.


Pengarang :