ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தை எதிர்கொள்ள 50 பேர் கொண்ட பணிப்படை- உலு சிலாங்கூர் கெஅடிலான் தொடக்கியது

ஷா ஆலம், அக் 17- ஆண்டு இறுதியில் ஏற்படக்கூடிய வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்காக உலு சிலாங்கூர் கெஅடிலான் கட்சி சார்பில் பணிப்படை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1,700 சதுர அடி பரப்பளவு கொண்ட அப்பகுதியில் வசிக்கும் 250,000 பேருக்கு உதவ அந்த பணிப்படை தயாராக உள்ளதாக உலு சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கூறினார்.

வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் இயந்திரத்தை தொடக்குவதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது. ஆனால், சில தரப்பினர் மழை காலம் குறித்து யோசித்து வருகின்றனர். வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் அதனை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ள நிவாரண பணிப்படையை தொடக்குவது முக்கியம் என நாங்கள் கருதுகிறோம். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் வெள்ளத்தைப் பற்றி நாம் அக்கறை கொள்வது அவசியம் என்றார் அவர்.

ஆண்டு இறுதியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பேரிடரை திறனுடன் எதிர்கொள்வதற்கு ஏதுவாக இங்குள்ள அந்தாரா காப்பியில் நேற்று 50 தன்னார்வலர்களைக் கொண்ட பணிப்படையை டாக்டர் சத்தியா நேற்று தொடக்கி வைத்ததோடு வெள்ள மீட்பு மாதிரி பயிற்சியையும் பார்வையிட்டார்.

இந்த பணிப்படை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடைகள், எல்.இ.டி. விளக்குகள், மெழுகுவர்த்தி, ஜெனரேட்டர் இயந்திரங்கள் படகுகள் மற்றும் மருந்துகள் போன்றவற்றையும் வழங்கும்.

வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ள இடங்களை குறிப்பாக ஆற்றோரங்களில் உள்ள குடியிருப்புகளைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் டாக்டர் சத்தியா சொன்னார்.


Pengarang :