ALAM SEKITAR & CUACAECONOMY

நாளை முதல் தென் சீனக் கடல் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றம் எச்சரிக்கை

கோலாலம்பூர், 17 அக்: தென் சீனக் கடலின் பல பகுதிகளில் நாளை முதல் வியாழன் வரை பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வகை 1 எச்சரிக்கையை விடுத்துள்ளது.

திமூர் காண்டோர், ரீஃப் நார்த், லாயாங்-லாயாங், பெலவான் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் 3.5 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசக்கூடும் என்றும் மெட்மலேசியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்குமாறும், எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் மெட்மலேசியா அறிவுறுத்துகிறது.

சமீபத்திய வானிலை தகவல்களை இணைய உலாவி, MyCuaca மொபைல் செயலி மற்றும்
மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மற்றும் ஹாட்லைன் 1-300-22-1638 மூலம் பெறலாம் என்று அறிக்கை கூறுகிறது.


Pengarang :