ECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

தமிழ் தேசிய வகைப் பள்ளிகளுக்கு 2022 ம் ஆண்டுக்கான மானியம்  வழங்குதலைச் சிலாங்கூர் அரசாங்கம் இன்று மேற்கொண்டது. 

ஷா ஆலம் ,17 அக் – சிலாங்கூர் மாநிலப் பள்ளி உதவித் திட்டம் என்பது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பழுதுபார்ப்பதற்கும், மாணவர்கள் கல்வி சமூக மேம்பாட்டுக்கும் உதவும் மாநில அரசாங்கத்தின் முன் முயற்சியாகும்.
இந்த உதவியின் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு மிகவும் உகந்த கற்றலுக்கான வசதியை வழங்குவதாகும். இந்தத் திட்டம் 2008 இல் செயல் படுத்தப்பட்டது,  இந்த ஆண்டு மொத்தம் 98 தமிழ் தேசிய வகைப் பள்ளிகள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடமிருந்து  மானிய உதவியைப் பெற்றன.
தமிழ் தேசிய வகைப் பள்ளிகளுக்காகப் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 98 பள்ளிகள் ஆகும். இதில் (RM5, 000,000.00.) வெள்ளி 50 லட்சம்  பள்ளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த உதவியைப் பள்ளி மற்றும் மாணவர்களின் மேம்பாட்டுக்காக நேர்மையாகப்  பயன்படுத்தவும், மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் தேர்ச்சி நிலையை  முடிந்தவரை உயர்த்திச் சிறந்த நிலைக்குக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் மானியம் வழங்குவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.
தமிழ்ப்பள்ளிகளின் SJKT ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் மீது மாநில அரசு கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளம் இந்த மானியம் என்று நிதி காசோலைகள் வழங்கும் நிகழ்வில் உரை நிகழ்த்திய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், நாம் அனைவரும் மாநில அரசின் நம்பிக்கையைக் காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Pengarang :