ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ள ஆபத்தின் போது திறமையாக செயல்பட, மீட்புக் கருவிகள் தயார் – செர்வ் 

ஷா ஆலம், 18 அக்: வெள்ளத்தின் போது உதவி குழு மிகவும் திறமையாக செயல்படுவதை உறுதி செய்ய, சிலாங்கூர் மீட்பு (செர்வ்) தன்னார்வத் தொண்டர்கள் மீட்பு உபகரணங்களை கொண்டு இருப்பர்.

படகுகள் மற்றும் லைஃப் ஜாக்கெட்டுகள் போன்ற உபகரணங்கள் அதிகாரிகளுக்கு ஆதரவுக் குழுவாக செயல்படும் தன்னார்வலர்களின் திறன்களை அதிகரிக்கின்றன என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“செர்வ் மீட்புக்கான வருடாந்திர ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். இந்த தன்னார்வக் குழுவில் உபகரணங்கள் உள்ளன, ஆனால் வீடுகளை சுத்தம் செய்யும் கருவிகள் போன்ற வெள்ளத்திற்கு பிந்தைய சேவைகளில் அதிக கவனம் செலுத்துகிறது.

“இந்தக் குழு மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும், ஆனால் முதலில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது அவசியம்,” என்று அவர் இங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

செர்வ் ரெஸ்க்யூவில் சேர 300க்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்த தாகவும் ஆனால் பல நிலைகளில் சோதனையிடப்பட்டு பிறகு 37 பேர் மட்டுமே தகுதி பெற்றதாகவும் அமிருடின் கூறினார்.

செர்வ் எலிட் என்று முன்பு அறியப்பட்ட செர்வ் ரெஸ்க்யூ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கையாள, நீர் மீட்புக் குழுவில் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்ட அடிப்படை பயிற்சியைப் பெற்றது.இக் குழுவை அமைப்பதற்காக மாநில அரசு RM100,000 நிதி வழங்கியது.


Pengarang :