ALAM SEKITAR & CUACAECONOMY

நேசாட் சூறாவளி குறித்து வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், அக் 18 –  சபா மாநிலத்தின் கூடாட் நகரின் வடமேற்கே சுமார் 1,328 கிலோமீட்டர் தொலைவில் மையமிட்டுள்ள நேசாட் சூறாவளி குறித்த ஆலோசனை அறிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சீனாவின் ஹைனான் நகருக்கு கிழக்கே சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சூறாவளி நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் இந்த சூறாவளி மேற்கு-தென்மேற்கு திசையில் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது என்றும் அதிகபட்சமாக மணிக்கு 139 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்றும் அந்த ஆய்வு மையம் தனது அகப்பக்கத்தில் தெரிவித்தது.

இந்த சூறாவளி காரணமாக தென்சீனக் கடலில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Pengarang :