Dato’ Menteri Besar Selangor Dato’ Seri Amirudin Shari (empat, kiri) bersama EXCO Perumahan Rodziah Ismail (dua, kiri) bergambar bersama Pengarah Eksekutif Yayasan Hijrah Selangor Dato’ Seri Mohamad Suparadi Md Noor (tiga, kiri) dan kakitangannya selepas merasmikan hiasan lantai tradisional atau kolam rangoli berbentuk bunga teratai sempena Deepavali 2022 di Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah, Shah Alam pada 19 Oktober 2022. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

அரசு தலைமைச் செயலகத்தில் ரங்கோலி கோலம்- மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் அடையாளம்

ஷா ஆலம், அக் 19- இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் இடப்பட்டுள்ள ரங்கோலி கோலம் வாழ்வியல் மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

கோலம் வரைவதில் தேர்ச்சி பெற்ற மூவர் சுமார் ஆறு மணி நேரத்தைச் செலவிட்டு இந்த கோலத்தை உருவாக்கியதாக சித்தம் எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர்  மேம்பாட்டு மையத்தின் நிர்வாக அதிகாரி எஸ். வசந்தி கூறினார்.

இந்த கோலத்தை ஒவ்வோராண்டும் பல்வேறு வடிவங்களில் படைப்போம். இம்முறை தாமரை மலரின் வடிவத்தை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று இந்த கோலத்தின் திறப்பு விழாவின் போது சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.

அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில அரசு தலைமைச் செயலகத்தில் போடப்பட்டுள்ள இந்த ரங்கோலி கோலத்தை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி திறந்து வைத்தார்.

தலைமையச் செயலகத்தின் வாயிலில் பல்வேறு வண்ணங்களில் காண்போரைக்  கவரும் வகையில் இந்த ரங்கோலி கோலம் உருவாக்கப்பட்டுள்ளது.


Pengarang :