ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

உர மூட்டை திருட்டு- சந்தேக நபருடன் கைகலப்பில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்து மரணம்

ஈப்போ, அக் 25- உர மூட்டை திருட்டு தொடர்பில் நபர் ஒருவருடன் ஏற்பட்ட கைகலப்பின் போது கால்வாயில் விழுந்த ஆடவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இச்சம்பவம் தஞ்சோங் பியாண்டாங், பாகான் தியாங்கில் நேற்று மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய ஆடவர் ஒருவரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

அந்த நபருடன் தாம் கைகலப்பில் ஈடுபட்டதையும் அக்கைகலப்பின் போது இருவரும் கால்வாயில் விழுந்ததையும் அச்சந்தேகப் பேர்வழி ஒப்புக் கொண்டார் என முகமது யூஸ்ரி சொன்னார்.

உர மூட்டை களவு போனது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் சந்தேகப் பேர்வழியுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தவறி கால்வாயில் விழுந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளை நோக்கிச் சென்ற அந்த நபர் திடீரென மயங்கி விழுந்தார் என்றார் அவர்.

ஏற்கனவே குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள சந்தேக பேர் நபர் மீது  மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவ்வாடவர் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவ்வாடவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :