ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலாக்காவில் வெள்ளம்- மூன்று நிவாரண மையங்களில் 179 பேர் அடைக்கலம்

மலாக்கா, அக் 28- வெள்ளம் காரணமாக அலோர் காஜாவிலுள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 179 பேராக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் 53 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

நேற்று மாலை 28 குடும்பங்களைச் சேர்ந்த 76 மட்டுமே துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியிருந்ததாக மலாக்கா மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் செயலகம் கூறியது.

நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் ஸ்ரீ பெங்காலான் தேசிய பள்ளியில் திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையத்தில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேர் தங்கியுள்ளதாக அது தெரிவித்தது.

மேலும் 20 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் கம்போங் காடேக் பாலாய் ராயாவில் தங்கியுள்ள வேளையில் கம்போங் தஞ்சோங் ரிமாவ் லுவார் பாலாய் ராயாவில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

நேற்று மாலை 3.30 மணி தொடங்கி பெய்த அடை மழை காரணமாக சுங்கை தம்பின் ஆறு பெருக்கெடுத்து சுற்று வட்டாரத்திலுள்ள ஆறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக மூன்று துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டன.


Pengarang :