ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இளையோருக்கான தேர்தல் கொள்கையறிக்கை- ஹராப்பான் இளைஞர் பிரிவு வெளியீடு

ஷா ஆலம், அக் 31- இளைஞர்களுக்கான பிரத்தியேக தேர்தல்
கொள்கையறிக்கையை பக்கத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவு
வெளியிட்டுள்ளது. இந்த கொள்கையறிக்கையில் கல்வி, சுகாதாரம்,
தொழில்முனைவோர் துறை, சுற்றுச் சூழல், சமூக பொருளாதாரம் உள்பட
இளம் தலைமுறையினர் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய அம்சங்கள்
இடம் பெற்றுள்ளன.
உயர்கல்விக் கூட நிர்வாகம் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும்
முன்னாள் மாணவர்கள் வசம் மீண்டும் வருவதற்கு ஏதுவாக உயர்கல்விக்
கூடங்களுக்கு சுயாட்சி வழங்கும் வகையில் 1971ஆம் ஆண்டு
பல்கலைக்கழக கல்லூரிச் சட்டத்தை ரத்து செய்வதும் இதில் அடங்கும்.
சொந்த ஊர்களுக்கு திரும்பும் மாணவர்களின் போக்குவரத்து கட்டணச்
சுமையைக் குறைப்பதற்காக கெம்பாரா சிஸ்வா திட்டத்தை அமல்படுத்தும்
பரிந்துரையும் அந்த கொள்கையறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தீபகற்ப மலேசியாவிலிருந்து சபா, சரவா
மாநிலங்களுக்கும் அங்கிருந்து தீபகற்ப மலேசியாவுக்கும் பயணம்
மேற்கொள்ளும் மாணவர்களுக்கு விமானக் கட்டணம் 199 வெள்ளியாக
நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் காணப்படும் வீட்டுடமைப் பிரச்னைக்கு தீர்வு
காணும் வகையில் தற்காலிக டிரான்சிட் வீடுகள், கட்டுபடி விலை வீடுகள்,
கட்டுபடி வாடகை வீடுகள், மலிவு மற்றும் நடுத்தர மலிவு விலை
வீடுகளை தேவைப்படும் இடங்களில் நிர்மாணிப்பது தொடர்பான
திட்டங்களையும் இந்த கொள்கையறிக்கை கொண்டுள்ளது.

Pengarang :