ECONOMYHEADERADMEDIA STATEMENTSELANGOR

போதைப் பொருள் வைத்திருந்தனர்- ஐந்து அரசு ஊழியர்கள் உள்பட பத்து பேர் கைது

கோலாலம்பூர், அக் 31- தலைநகர் ஜாலான் பூச்சோங்கில் உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் நோடா சோதனை  நடவடிக்கையில் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐந்து அரசு ஊழியர்கள் உள்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இரவு மணி 11.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது ஒரு அறையில் இருந்த அந்த ஐந்து அரசு ஊழியர்களிடமிருந்து 0.87 கிராம் மெத்தம்பெத்தமின், 7.38 கிராம் எர்மின் 5 போதை மாத்திரைகள் மற்றும் 5.65 கிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பிரீக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஸாம் அப்துல் சுக்கோர் கூறினார்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் நால்வர் அம்பிட்டமின் மற்றும் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளையும் ஒருவர் கெத்தமின் போதைப் பொருளையும் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது என அவர் சொன்னார்.

சுமார் 1,800 வெள்ளி மதிப்பிலான இந்த போதைப் பொருள்களை ஐந்து முதல் பத்து பேருக்கு விநியோகிக்க முடியும். தடை செய்யப்பட்ட அந்த போதைப் பொருள் அவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பதைக் கண்டறிய விசரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சோதனை நடவடிக்கையில் அந்த பொழுதுபோக்கு மையத்தின் பராமரிப்பாளரான உள்நாட்டு ஆடவர், மூன்று வங்காளதேசிகள் மற்றும் ஒரு  வியட்னாமிய பெண் ஆகியோரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :