MEDIA STATEMENTNATIONALSUKANKINI

பிரெஞ்சு பொது பூப்பந்துப் போட்டியில் பியர்லி டான்-எம்.தினா ஜோடி வெற்றி

கோலாலம்பூர், அக். 31 - தேசிய  முதல் நிலை பூப்பந்து  விளையாட்டாளர்களான பியர்லி டான்-எம். தினா ஜோடி நேற்றிரவு பாரிஸ்,  ஸ்டேட் பியர் டி கோபெர்டைனில் நடைபெற்ற பிரெஞ்சு பொது பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தனர்.

அவர்கள் இரண்டு முறை உலக சாம்பியனான ஜப்பானின் மயூ மாட்சுமோட்டோ-வகானா நாகஹாராவை 21-19, 18-21 21-15 என்ற செட் கணக்கில் தோற்கடித்து பிரஞ்சு பொது பூப்பந்து போட்டியில்  வென்ற முதல் மலேசிய மகளிர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர்.

 கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற  சுவிஸ் பொது பூப்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற உலகின் 11ஆம் நிலை ஆட்டக்காரர்களான் இந்த ஜோடிக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி இதுவாகும் 

மொத்தம் 72 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டம் இரு ஜோடிகளுக்கு இடையேயான முதல் போட்டியாக அமைந்தது.

முதல் செட்டில் பியர்லி-தினா ஜோடி ஆட்டத்தை மெதுவாக ஆரம்பித்தனர். ஆனால் விரைவில் 18-10 என்ற புள்ளிகளில்  முன்னிலை வகித்தனர். இருப்பினும், வெற்றிப் புள்ளியைப் பெறுவதற்கு முன்பு ஜப்பானிய ஜோடி 20-19 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது மிகவும் பதட்டமான தருணமாக இருந்தது.

இருப்பினும், பியர்லி-தினா இரட்டையர்கள் முதல் செட் வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர்.  ஆட்ட வேகத்தைத் தக்கவைத்துக் கொண்ட போதிலும்  மாட்சுமோட்டோ-நகஹாரா ஜோடியின் ஆட்ட பாணியை கணிக்கத் தவறியதால்  இரண்டாவது செட்டில் 21-18 என்ற புள்ளிக் கணக்கில் பின்னடைவை எதிர்நோக்கினர் .

 ஆனால், பின்னர் அந்த ஆட்டக்காரர்களின்  ரிதம் மற்றும் ஆட்ட பாணியை கண்டறிந்து   21-15 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர்.

Pengarang :